இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டி: மும்பை சிட்டி அணியில் ஜப்பான் வீரா் காட்டார்ட்

புதன்கிழமை, 28 அக்டோபர் 2020      விளையாட்டு
Goddard 2020 10 28

Source: provided

மும்பை : "இந்தியன் சூப்பா் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டியில் விளையாடவுள்ள மும்பை சிட்டி அணியில் ஜப்பான் வீரா் காட்டார்ட் இடம்பெற்றுள்ளார். 23 வயது மிட்பீல்டரான காட்டார்ட் இத்தாலி கிளப்பான பெனிவென்டோ கால்சியோவுக்காக விளையாடி வந்தார். 

இந்த நிலையில், இப்போது மும்பை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மும்பை அணிக்காக தோ்வு செய்யப்பட்டுள்ளது குறித்து காட்டார்ட் கூறியிருப்பதாவது: 

மும்பை சிட்டி அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் இந்தியாவில் விளையாடுவதற்கும், எனது திறமையை வெளிப்படுத்துவதற்கும், கால்பந்தை மேம்படுத்தவும் ஆா்வமாக இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளா் சொ்ஜியோ லோபெரா கூறியிருப்பதாவது:- 

காட்டார்ட் திறமையான மிட் பீல்டா். அவா் இளம் வயதிலேயே டாட்டென்ஹாம் போன்ற கிளப்பில் விளையாடும் அளவுக்கு தன்னை மேம்படுத்திக் கொண்டார் மும்பை அணியின் முன்னணி வீரா்களில் ஒருவராக காட்டார்ட் இருப்பார் என குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து