முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துபாயில் உருவான பிரமாண்ட மர படகுகிற்கு கின்னஸ் சான்றிதழ்

வியாழக்கிழமை, 29 அக்டோபர் 2020      உலகம்
Image Unavailable

உலகில் தயாரிக்கப்படும் படகுகளில் அமீரகத்தில் உருவாக்கப்படுபவை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக துபாயில் பிரமாண்டமான மரத்திலான படகுகள் இப்போதும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த 1940-ம் ஆண்டில் ஒபைத் ஜுமா பின் மஜீத் அல் பலாசி என்ற அமீரகத்தை சேர்ந்தவர் பிரபலமான பாரம்பரிய மரப்படகுகளை உருவாக்கி வந்தார்.

தற்போது அவரது குடும்பத்தினர் துபாய் கிரீக் பகுதியில் பாரம்பரிய மரப்படகுகளை தயாரித்து வருகின்றனர். அந்த தொழில் செய்து வரும் அவரது மகன் மஜீத் ஒபைத் அல் பலாசி (52) மற்றும் குடும்பத்தினர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ‘ஒபைத்’ என்ற பெயரில் பிரமாண்டமான மரப்படகை உருவாக்கி வந்தனர்.

தற்போது இந்த படகின் கட்டுமான பணிகள் நிறைவடைந்து கின்னஸ் சாதனை நிறுவனம் இந்த மரப்படகிற்கு உலகின் பிரமாண்டமான மரப்படகு என சான்றளித்துள்ளது. இந்த படகு குறித்து மஜீத் ஒபைத் அல் பலாசி கூறியதாவது:-

இது 300 அடி நீளமும், 67 அடி அகலமும், 32 அடி உயரமும் கொண்ட படகாகும். கிட்டத்தட்ட கால்பந்து மைதானத்தின் அளவுள்ள படகு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படகின் எடை 2 ஆயிரத்து 500 டன் ஆகும். இதில் சுமார் 2 ஆயிரத்து 500 டன் எடையுள்ள பொருட்களை (400 யானைகளின் எடை) ஏற்றி செல்ல முடியும். இதன் மொத்த கொள்ளளவு 6 ஆயிரம் டன் ஆகும். இந்த படகில் 1,850 குதிரை சக்தி திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மணிக்கு 14 நாட் (25 கி.மீ) வேகத்தில் பயணிக்க முடியும். வரும் காலங்களில் ஏமன், சோமாலியா, சூடான், எகிப்து, கென்யா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு சரக்கு வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும், விரைவில் உலகின் அனைத்து துறைமுகங்களிலும் இந்த படகை காணமுடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து