அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்: கபில்தேவ் சொல்கிறார்

வியாழக்கிழமை, 29 அக்டோபர் 2020      விளையாட்டு
Kapil-Dev 2020 10 29

முன்பை இட தற்போது மிகவும் நலமாக இருப்பதாக கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் (வயது 61) கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு மற்றும் நெஞ்சுவலி காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஆஞ்சிபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நடந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தான் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். மேலும் முன்பை இட தற்போது தான் மிகவும் நலமாக இருப்பதாகவும், விரைவில் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து