திருமண வீட்டார் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதில் 7 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 30 அக்டோபர் 2020      இந்தியா
Hyderabad 2020 10 30

Source: provided

ஐதராபாத் : ஆந்திராவில் திருமண வீட்டார் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு கோதாவரி மாவட்டம் தண்டிகொண்டா மலைக் கோவிலில் அப்பகுதியை சேர்ந்த ஜோடிக்கு அதிகாலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்ததும் திருமண வீட்டார் வேனில் மலையிலிருந்து கீழே இறங்கியுள்ளனர். அப்போது வேனின் பிரேக் திடீரென துண்டித்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலே உயிரிந்தனர். விபத்து தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போது மேலும் இருவர் உயிரிழந்தனர்.

திருமண நிகழ்ச்சியின் போது இந்த கோர விபத்து நிகழ்ந்தது, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காயம் அடைந்த 8 பேருக்கு அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து