முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க மருத்துவர்கள் மீது டிரம்ப் அதிரடி குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 31 அக்டோபர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க மருத்துவர்கள் மீது அதிபர் டிரம்ப் திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

மிச்சிகன் மாநிலம் வாட்டர்போர்டு நகரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேசியதாவது. 

அமெரிக்காவில் இதயப்பிரச்சினை அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறுதி நாட்களில் உள்ள நோயாளிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால், அவர்கள் கொரோனாவால் உயிரிழந்ததாக அறிவிக்கப்படுகிறார்கள். 

யாராவது கொரோனாவால் உயிரிழந்தால் நமது மருத்துவர்களுக்கு கூடுதல் பணம் கிடைக்கும், அதனால் தான் மருத்துவர்கள் பலி எண்ணிக்கையை உயர்த்துகின்றனர்.

ஆனால் ஜெர்மனி உள்பட பல நாடுகளில் இதயப்பிரச்சினை அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கொரோனாவால் உயிரிழந்தால், அவர்கள் இதயப்பிரச்சினை அல்லது புற்றுநோயால் இறந்ததாக அறிவிக்கப்படுகிறது. 

அமெரிக்காவில் தேசியளவில் வெறும் 3 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா பாதிப்பால் அவசர சிகிச்சையில் சிகிச்சை பெறுகின்றனர். 

உலகில் எந்த நாட்டையும் விட அமெரிக்காவில் தான் அதிக கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது, அதனால் தான் அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கிறது. 

தற்போது நாட்டில் இறப்பு எண்ணிக்கை குறைகிறது, மக்கள் குணமடைகின்றனர். அதற்கு நானும், எனது மனைவியும் உதாரணம். 

இவ்வாறு டிரம்ப் கூறினார். 

மருத்துவத்துறையை தாக்கி டிரம்ப் பேசுவது இது முதல் முறையல்ல. கடந்த சனிக்கிழமை பேசும்போது, மருத்துவர்கள் அதிக பணம் பெறுவதாகவும், மருத்துவமனைகளுக்கு அதிக பணம் கிடைப்பதாகவும் கூறினார். 

மருத்துவர்கள் தாங்கள் சிகிச்சையளிக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதாகக் கூறியதற்கு அமெரிக்க மருத்துவ சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து