முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புல்வாமா தாக்குதலில் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்த போது அரசியல் செய்தவர்களை நாடு மறக்காது: பிரதமர் மோடி பேச்சு

சனிக்கிழமை, 31 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

கெவாடியா : புல்வாமா தாக்குதலில் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்த பொழுது, அது பற்றி அரசியல் செய்தவர்களை நாடு ஒருபோதும் மறக்காது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஒன்றுபட்ட வலிமையான இந்தியாவை உருவாக்க பாடுபட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் நாடு முழுவதும் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.   

இதனை முன்னிட்டு குஜராத்தின் கெவாடியா நகரில் வடிவமைக்கப்பட்டு உள்ள ஒற்றுமைக்கான சிலை மீது பிரதமர் மோடி பால் ஊற்றி, மலர்களை தூவி மரியாதை செலுத்தி வணங்கினார்.

இதனை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க கலை நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் ஆகியவை தொடங்கி நடந்தன. பின்பு, பாதுகாப்பு படை வீரர்களின் ராணுவ அணிவகுப்பு நடந்தது. 

இதனை பிரதமர் மோடி பார்வையிட்டார்.  இதன் பின்னர் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,

உலகிலுள்ள அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய தருணமிது.  பயங்கரவாதம் மற்றும் வன்முறை ஆகியவற்றால் ஒருவரும் பலனடைய முடியாது. 

இந்தியா எப்பொழுதும் பயங்கரவாதத்திற்கு எதிராகவே போராடி வருகிறது.  புல்வாமா தாக்குதலில் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்த பொழுது, சிலர் அதற்காக வருத்தப்படவில்லை.  இதனை ஒருபோதும் நாடு மறக்காது. 

அந்த நேரத்தில் இந்த நபர்கள் அரசியல் செய்து கொண்டு இருந்தனர்.  இதுபோன்ற அரசியலை செய்ய வேண்டாம் என்று நாட்டின் நலனுக்காக நான் வேண்டி கேட்டு கொள்கிறேன்.

பாராளுமன்றத்தில் அண்டை நாட்டுக்காக உண்மையானது (இந்தியாவில் புல்வாமா தாக்குதல் பற்றியது) ஒப்பு கொள்ளப்பட்ட விதம், இந்த சம்பவத்தில் அரசியல் செய்தவர்களின் உண்மை முகம் வெளிப்படும் வகையில் அமைந்தது.  

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட போராளிகளை 130 கோடி இந்தியர்களும் ஒன்றாக கவுரவித்தனர். 

இந்நேரத்தில் கூட்டு ஆற்றலை நாடு நிரூபித்த விதம் இதற்கு முன் நடந்திராத ஒன்றாகும்.  காஷ்மீர் தற்போது, வளர்ச்சிக்கான புதிய பாதையில் பயணிக்கிறது. 

வடகிழக்கில் மீண்டும் அமைதியை கொண்டு வருவதில் ஆகட்டும், அல்லது அங்கே வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஆகட்டும் ஒற்றுமைக்கான புதிய பரிமாணங்களை நாடு நிலைநாட்டியுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து