முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் இலவசப் பயிற்சி ஓரிரு நாட்களில் தொடங்கும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

சனிக்கிழமை, 31 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

ஈரோடு : நீட் இலவசப் பயிற்சி ஓரிரு நாட்களில் தொடங்கும் எனவும் பயிற்சிக்காக ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார்.  அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

நீட் தேர்வில் பயிற்சி பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி தேவை என்னும் அந்தப் பட்டியலில் நேற்று(நேற்று முன்தினம்) வரை 9,842 மாணவர்கள் மட்டுமே இருந்தனர்.

நேற்று (நேற்று முன்தினம்) ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் கூடுதலாக பதிவு செய்துள்ளனர்.  ஆன்லைன் விண்ணப்பப் பதிவு முடிவு பெற்ற பின் ஓரிரு நாட்களில் அரசு சார்பில் நீட் பயிற்சி தொடங்கப்படும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முழுமையாகப் பயிற்சி வழங்கும் வகையில், அவர்களுக்கு விரைவிலேயே பயிற்சியைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். 

பள்ளிகளைத் திறப்பதற்குத் தற்போதைக்கு சாத்தியக் கூறுகள் இல்லை. நடப்புக் கல்வி ஆண்டில் மட்டும் அரசுப் பள்ளிகளில் 5 லட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து