முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொலைதூர கல்வி மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு: யு.ஜி.சி. அறிவிப்பு

சனிக்கிழமை, 31 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக யு.ஜி.சி. அறிவித்துள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி) செயலாளர் ரஜனிஷ் ஜெயின் அனைத்துப் பல்கலைக் கழகங்களும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-  

நாடு முழுவதும் 2020-21 ஆம் கல்வி ஆண்டில் செப்டம்பர் - அக்டோபர் பருவத்துக்கான திறந்த நிலை, இணைய வழி மற்றும் தொலைதூரக் கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள அக்.31-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் நவ.30-ம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களை தொடர்புடைய கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 15-ம் தேதிக்குள் யு.ஜி.சி.க்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்கள் தொலைதூரக் கல்வி முறையில் புதிய பட்டப் படிப்புகளை தங்களின் நிறுவனத்தில் தொடங்க கடந்த ஆண்டு யு.ஜி.சி.யிடம் அனுமதி கோரியிருந்தது.

இதில் 16 பல்கலைக் கழகங்களுக்கு யு.ஜி.சி. அனுமதி வழங்கியது.  தமிழகத்தில் மதுரை காமராஜர் பல்கலை., சேலத்தில் உள்ள பெரியார் பல்கலை., சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை. ஆகிய 3 மாநில அரசு பல்கலைக் கழகங்களில் 18 புதிய பாடப்பிரிவுகளுக்கு யு.ஜி.சி. அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து