முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

58 ஆண்டுகளில் இல்லாத வகையில் டெல்லியில் கடும் குளிர் பதிவு

சனிக்கிழமை, 31 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் நடப்பு அக்டோபர் மாதத்தில் கடந்த 58 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் குளிர் பதிவாகியுள்ளது. நிகழாண்டு அக்டோபர் மாதத்தில் 17.2 டிகிரி செல்சியஸ் ஆக குறைந்தபட்ச வெப்ப நிலை பதிவானது. 1962- ஆம் ஆண்டுக்கு பிறகு அக்டோபர் மாதத்தில் வெப்ப நிலை இந்த அளவு இப்போதுதான் குறைந்துள்ளது. 

1962- ம் ஆண்டு டெல்லியில் அக்டோபர் மாதத்தில் வெப்ப நிலை 16.9 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது. வழக்கமாக டெல்லியில் அக்டோபர் மாதத்தில் 19.1 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கே வெப்ப நிலை பதிவாகும். டெல்லியில் நிலவும் கடும் குளிர் மற்றும் காற்று மாசு ஆகியவற்றால் மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து