முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு: முதல்வருக்கு சமூக நீதி காவலர் பட்டம் சூட்டி அம்மா பேரவை சார்பில் தீர்மானம் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிறைவேற்றினார்

சனிக்கிழமை, 31 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை முதல்வர்  பெற்றுத் தந்துள்ளார் இதனையொட்டி திருமங்கலத்தில் அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் முதல்வருக்கு  சமூகநீதிக் காவலர் என்று பட்டம் சூட்டி  அம்மா பேரவையின் சார்பில் மாநில அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் ,அமைச்சருமான அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கீழ் கண்ட தீர்மானத்தை நிறைவேற்றினார்.

நாடு முழுவதும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு கடந்த 2017-18ஆம் கல்வி ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது . நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்று அம்மாவின் அரசு வலியுறுத்தியதோடு,அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சியும் அளித்து மாணவர்கள் நலன் காக்கும் அரசாக அம்மாவின் அரசு திகழ்ந்தது. அதனை தொடர்ந்து இந்தியாவில் எந்த முதல்வரும் செய்திடாத வகையில் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பை நனவாக்கும் வகையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று சட்ட சபையில் முதல்வர் அறிவித்தார் . 

அதனை தொடர்ந்து இதனை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை முதல்வர்  அமைத்தார் . அந்த குழுவும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என அந்த குழு பரிந்துரைத்தது . 

அந்த குழுவின் பரிந்துரை குறித்து முதல்வர் தலைமையிலான அமைச்சரை கூட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கலாம் என்று ஒப்புதல் அளிக்கப்பட்டு அதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டபேரவை கூட்டத்தில் உள் ஒதுக்கீட்டிற்கான வரலாற்று சிறப்புமிக்க மசோதாவை முதல்வர் நிறைவேற்றி அதனை கவர்னர் ஒப்புதலுக்காக செப்டம்பர் மாதம் 18-ம் தேதி அனுப்பி வைத்தார் . 

இதனை தொடர்ந்து உடனடியாக மசோதாவை நிறைவேற்றும் வண்ணம் அக்டோபர் 5 - ம் தேதி முதல்வர் கவர்னரை சந்தித்து வலியுத்தினார் அதனை தொடர்ந்து முதல்வர்  வழிகாட்டுதலின்படி அக்டோபர் 20 - ம் தேதி அமைச்சர் குழுவும் சந்தித்து வலியுறுத்தினார்கள். 

முதல்வரின் தொடர் முயற்சியால் கவர்னர் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 75 சதவீதம் இட ஒதுக்கிட்டினை வழங்க அரசாணை வெளியிட்டார் . யாரும் கோரிக்கை வைத்திடாத வகையில் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவபடிப்பினை நனவாக்கும் வண்ணம் முதல்வரின் சிந்தனையில் உதித்து அம்மா  எப்படி 69 சதவீத இட ஒதுக்கீட்டினை பெற்று தந்து அதை ஒன்பது அட்டவணையில் இடம் பெறச் செய்து சமூக நீதியை காத்த வீராங்கணை போல் இன்றைக்கு அம்மாவின் வழியில் நமது முதல்வர்  சமூக நீதியில் புரட்சியை செய்திட்டு தமிழக மக்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்து, ஒட்டு மொத்த மாணவ சமூதாயத்தின் நல பாதுகாவலராக திகழும் இணை ஒருங்கிணைப்பாளர் , ஒட்டு மொத்த இந்திய மாநிலங்களுக்கு வழிகாட்டியாக திகழும் வெற்றியின் மறு உருவம் , முதல்வர் எடப்பாடிக்கு " சமூக நீதி காவலர் " என்ற பட்டத்தை அம்மா பேரவை சூட்டி பொற்பாதம் பணிந்து வணங்கி கோடானு கோடி நன்றியினை தெரிவித்து வணங்குகிறது. 

முதல்வரின் விடாமுயற்சி வெற்றிக்கு துணையாக நின்ற துணை முதலமைச்சர் , அண்ணன் ஒ.பி.எஸ் , மற்றும் மூத்த அமைச்சர் பெருமக்களுக்கும் , அம்மா பேரவை கோடானு கோடி நன்றியினை தெரிவித்து கொள்வததோடு முதல்வர் பெற்று தந்த இந்த சமூக நீதியை மக்களிடத்தில் சாதனை திட்டங்களாக கொண்டு சென்று வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெற்று மூன்றாம் முறையாக மகத்தான ஹாட்ரிக் சாதனை படைக்கும் வகையில் களப்பணி ஆற்றுவோம் என்று குளுரை ஏற்கிறோம் என்று தீர்மானத்தை நிறைவேற்றினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து