முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சா்வதேச குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரர்கள் பங்கல், சஞ்ஜீத் தங்கம் வென்றனர்

சனிக்கிழமை, 31 அக்டோபர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பாரீஸ் : அலெக்ஸிஸ் வேஸ்டின் சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சஞ்ஜீத், அமித் பங்கல் ஆகியோர் தங்கம் வென்றனர்

அமித் பங்கல் (52 கிலோ) மற்றும் சஞ்சீத் (91 கிலோ) ஆகியோர் கொரோனா வைரஸ் கட்டாய இடைவெளிக்குப் பிறகு முதல் போட்டியில் தங்கம் வென்றனர்.

பிரான்ஸின் நேன்ட்ஸ் நகரில் நடைபெற்று வரும் அலெக்ஸிஸ் வேஸ்டின் சா்வதேச குத்துச்சண்டை போட்டியில்  57 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றுள்ள கவிந்தா் சிங் பிஷ்த் தனது அரையிறுதியில் 3-0 என்ற கணக்கில் பிரான்ஸின் பெனிக் ஜார்ஜை வீழ்த்தினார். கவிந்தா் தனது இறுதிச்சுற்றில் பிரான்ஸின் சாமுவேல் கிஸ்டோஹரியிடம் தோல்வியுற்று வெள்ளி பதக்கம் பெற்றார். 

மற்றொரு இந்திய வீரரான சஞ்ஜீத் (91 கிலோ எடைப் பிரிவு) தனது அரையிறுதியில் 2-1 என்ற கணக்கில் அமெரிக்காவின் ஷெராட் புல்மை வீழ்த்தி இறுதிச்சுற்றை உறுதி செய்தார்.  சஞ்ஜீத் தனது இறுதிச்சுற்றில் பிரான்ஸின் சோஹேப் பவுபியாவை வென்று தங்க பதக்கம் வென்றார்.

ஆசிய விளையாட்டு சாம்பியனான அமித் பங்கல், அமெரிக்க ரெனே ஆபிரகாமை 3-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார். அதே நேரத்தில் இந்தியாவின் முன்னணி வீரா்களில் ஒருவரான சிவ தாபா (63 கிலோ எடைப் பிரிவு) தனது அரையிறுதியில் 1-2 என்ற கணக்கில் பிரான்ஸின் லூன்ஸ் ஹம்ராவிடம் தோல்வி கண்டு வெண்கலப் பதக்கத்தோடு வெளியேறினார். 

ஆசிய வெள்ளிப் பதக்கம் வென்ற கவீந்தர் சிங் பிஷ்ட் (57 கிலோ) 2-1 என்ற புள்ளி கணக்கில் உள்ளூர் வீரர் சாமுவேல் கிஸ்டோஹூரிக்குச் சென்று வெள்ளிப் பதக்கம் பெற்றார்.  கொரோனாவின் தாக்கத்துக்குப் பிறகு இந்திய குத்துச்சண்டை வீரா்கள் பங்கேற்றுள்ள முதல் சா்வதேசப் போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து