முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது ஐதராபாத்

ஞாயிற்றுக்கிழமை, 1 நவம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஷார்ஜா : ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.  இதையடுத்து, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக ஜோஷ் பிலிப், தேவ் படிக்கல் களமிறங்கினர்.

படிக்கல் 5 ரன்னிலும், கேப்டன் கோலி 7 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் களமிறங்கிய டிவில்லியர்ஸ் 24 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். சற்று நிலைத்து நின்று ஆடிய பிலிப் 32 ரன்னில் வெளியேறினார். 

பின்னர் வந்த வீரர்கள் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில், பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் அணியின் சந்தீப் சர்மா, ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் வார்னர் 8 ரன்னிலும், சகா 39 ரன்னிலும், மணீஷ் பாண்டே 26 ரன்னிலும் அவுட்டாகினர். 

வில்லியம்சன் 8 ரன்னிலும் அபிஷேக் சர்மா 9 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய ஜேசன் ஹோல்டர் 10 பந்தில் 26 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

ஆட்ட நாயகன் விருது சந்தீப் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றி மூலம் ஐதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடம் பிடித்து, பிளே ஆப் செல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து