முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா, சீனா தங்கள் பிரச்சினைகளை தாங்களே தீர்த்து கொள்ளும் : ரஷியா

புதன்கிழமை, 4 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : லடாக் எல்லையில் இந்தியா சீனா ராணுவம் இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இரு தரப்பும் தூதரக ரீதியிலும் ராணுவ ரீதியிலும் பல்வேறு உயர் மட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன. ஆனாலும் பதற்றம் தணியாத நிலையில் இந்த பிரச்சினையில் தலையிட அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. 

இந்த நிலையில் இந்தியாவும் சீனாவும் தங்கள் பிரச்சினையை தாங்களே சமாளிக்கும் திறன் கொண்டது என்று ரஷியா கருத்து தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து டெல்லியில் உள்ள ரஷிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் இரு தரப்பினருக்கும் பயனளிக்காது. ஆனால் இது சில நேர்மையற்ற கூற்றுகள் அவர்களின் இரு தரப்பு உரையாடலில் தலையிட வாய்ப்பு அளிக்கின்றன.

இரு நாடுகளும் தங்கள் பண்டைய வரலாறு மற்றும் ஞானத்துடன் நன்கு அறியப்பட்டவை, பிரச்சினையை தாங்களே சமாளிக்கும் திறன் கொண்டவை என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் ரஷியா ஒரு சிறப்பான அதே சமயம் சுதந்திரமான உறவை கொண்டிருப்பதால் ஆக்கப்பூர்வமான உரையாடலின் மூலம் வேறுபாடுகளை தீர்க்க எங்கள் நண்பர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம்” என்று அதில் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து