முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய முதலீடு பெறுவதில் தமிழகம் முதலிடம் கேர் ரேட்டிங்க்ஸ் ஆய்வறிக்கையில் தகவல்

புதன்கிழமை, 4 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : செப்டம்பரில் முடிவடைந்த முதல் அரையாண்டில், இந்திய மாநிலங்களில் புதிய முதலீடுகளை பெறுவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 

இது குறித்து கேர் ரேட்டிங்க்ஸ் அமைப்பின் ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

செப்டம்பரில் முடிவடைந்த முதல் அரையாண்டில் இந்தியாவில் செய்யப்பட்ட புதிய முதலீடுகளில் தமிழகம் 16 சதவீதத்தை ஈர்த்துள்ளது. 11 சதவீத முதலீடுகளை பெற்று ஆந்திர பிரதேசம் இரண்டாவது இடத்திலும், தலா 7 சதவீத முதலீடுகளை பெற்ற ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா மூன்றாவது இடத்திலும் உள்ளன. சென்ற வருடத்தின் இதே காலகட்டத்தில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருந்தாக கேர் ரெட்டிங்கஸ் கூறியுள்ளது. 

2020-21இன் முதல் அரையாண்டில் இந்தியாவில் செய்யப்பட்ட புதிய முதலீடுகளின் மொத்த அளவு, சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் 69 சதவீதம் குறைந்து 1.5 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கின் விளைவாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டது. சென்ற நிதியாண்டின் முதல் அரையாண்டை விட இந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் மத்திய அரசின் முதலீடுகள் 3.2 லட்சம் கோடியில் இருந்து 60,000 கோடியாக குறைந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து