முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயவு செய்து பட்டாசுகளை வெடிக்காதீர்கள்: டெல்லி மக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்

வியாழக்கிழமை, 5 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

டெல்லி மக்கள் தயவு செய்து பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு மிகவும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் நிலவும் கடும் காற்று மாசுவுக்கு அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் இருந்து விவசாய நிலங்களில் உள்ள அதன் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதுதான் என்ற தொடர் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. 

இந்த நிலையில் மிக மோசமான காற்று மாசுவை தவிர்த்து அதனை கட்டுப்படுத்தும் விதமாக வரும் தீபாவளி பண்டிகை உட்பட திருமண நிகழ்ச்சிகள் என அனைத்திற்கும் பட்டாசு வெடிக்க மற்றும் அதனை சந்தைகளில் விற்பனை செய்ய முழுமையாக தடை விதிக்கப்படுவதாக ராஜஸ்தான் அரசு தரப்பில்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 14 மற்றும் 15 ஆகிய இரண்டு தேதிகளில் டெல்லி மற்றும் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து டெல்லி அதன் அண்டை மாநிலங்களில் தற்போது பட்டாசு விற்பனையும் மெதுவாக துவங்க ஆரம்பித்து, அதனை பொதுமக்கள் வெடிக்கவும் ஆரம்பித்து விட்டனர்.

இந்த நிலையில் டெல்லி காற்று மாசுவை முழுமையாக கட்டுப்படுத்தும் விதமாக ராஜஸ்தான் மாநிலத்தைப் போன்று டெல்லியிலும் முழுவதும் பட்டாசு வெடிக்க மற்றும் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுமா? அல்லது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் படி இரண்டு மணி நேரம் என்ற வீதம் அனுமதி வழங்கப்படுமா என்பது பொதுமக்களின் கேள்வி எழுந்துள்ளது. இதில் யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம் நடைமுறையில் இருக்கும் போது, டெல்லி அரசால் தன்னிச்சையாக எந்த புதிய முடிவும் எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது:- 

தயவு செய்து பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.  பட்டாசுகளை வெடிப்பதன் மூலம் உங்கள் சொந்த குடும்பத்தின் உறுப்பினர்களின் வாழ்க்கையுடன் நீங்கள் விளையாடுகிறீர்கள். நவம்பர் 14-ம் தேதி இரவு 7.49 மணிக்கு, 2 கோடி டெல்லி குடிமக்கள் ஒன்று சேர்ந்து லட்சுமி பூஜை செய்வார்கள். பூஜையை நான் தொடங்கி வைக்கிறேன். இந்நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து