முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காயப்படுத்த ரூ.10 ஆயிரம்; கொலை செய்ய ரூ.55 ஆயிரம்: உ.பி.யில் கூலிப்படையின் வினோத விளம்பரம்

வியாழக்கிழமை, 5 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

அடித்து காயப்படுத்த ரூ.10 ஆயிரம். கொலை செய்ய ரூ 55 ஆயிரம் மட்டுமே அணுகவும் என டெலிபோன் எண்களுடன் ஒரு கூலிப்படை வாலிபர் கையில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்து விளம்பரம் வெளியிட்டு உள்ளார்.

உத்தரபிரதேசத்தில் முசாபர்நகரைச் சேர்ந்த ஒரு கும்பல் தங்களது கூலிப்படை பணத்திற்காக மக்களைத் தாக்கவோ கொலை செய்யவோ அதற்கான விலைப்பட்டியலை வெளியிட்டு உள்ளது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த கூலிப்படை கும்பல் மக்களைத் துன்புறுத்துவது முதல் அவர்களைக் கொல்வது வரையிலான குற்றங்களைச் செய்ய வசூலிக்கப்படும் விலைபட்டியல் குறித்து ஏராளமான விளம்பர படங்கள்  சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டு உள்ளன. கூலிப்படி குறித்த விளம்பரத்தில் ஒரு வாலிபர் துப்பக்கியை பிடித்து கொண்டு இருக்கிறார் அதில் குறிப்பிட்டு உள்ள விளக்கப் படத்தின்படி, இந்த தொகை ரூ.10,000 - 55,000 வரை உள்ளது, யாரையாவது மிரட்ட வேண்டுமா ரூ. 1000, அவர்களை அடிக்க ரூ.5 ஆயிரம், தாக்கி காயப்படுத்த வேண்டுமா, ரூ.10,000 கொலை செய்ய ரூ.55,000 வசூலிக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.  மேலும் அதிக தொடர்பு கொள்ள டெலிபோன் எண்ணும்  துப்பாக்கிகள் படமும் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த விலைப்பட்டியல் சமூக வலைதளத்தில் வைரலானது. இது உத்தரபிரதேச காவல்துறையினரின் கவனத்த்திற்கும் சென்ரது.  மேலும் மக்களை காயப்படுத்திய அல்லது அச்சுறுத்தியதற்காக இந்த விலைப்பட்டியலை பதிவேற்றிய நபரை அவர்கள் தேடத் தொடங்கினர். இதுகுறித்த விலைப்பட்டியலை பதிவேற்றிய இளைஞர்கள் சரதவல் காவல் நிலைய பகுதியின் சவுக்கடா கிராமத்தில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டனர். இங்குள்ள இளைஞன் பி.ஆர்.டி. ஜவானின் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து