முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி: பாகிஸ்தான் கொண்டாட்டம்

வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் வெளிவர உலகமே காத்திருக்கிறது. இந்த நிலையில், ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடன் அதிபராக வெண்டும் என ஆவலாகக் காத்திருக்கும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. 

கடந்த நான்கு ஆண்டுகளில், டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் நேரடியான அணுகுமுறையால் பாகிஸ்தானுக்கு நிறைய சிக்கல்கள் இருந்தன. ஜோ பிடனின் வெற்றி அவர்களது பல சிக்கல்களை சரி செய்யும் என்ற நம்பிகையுடன் பாகிஸ்தான் காத்திருக்கிறது. 

மறுபுறம், ஜோ பிடன் ஒருமுன்னாள் தூதர் மற்றும் பாகிஸ்தானுடன் நல்லுறவு கொண்டவர். ஜோ பிடனின் வெற்றியை பாக்ஸ்தான் விரும்புவதற்கான காரணம் இதுதான். இரு நாடுகளுக்கும் இடையிலான பழைய இராஜதந்திர சகாப்தத்தை ஜோ பிடன் திருப்பித் தருவார் என்று பாகிஸ்தான் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

ஜோ பிடன் எப்போதுமே பாகிஸ்தான் ஆதரவு எண்ணம் கொண்டவர். அவர் பாகிஸ்தானுடன் நல்லுறவைக் கொண்டிருந்தார். இப்படி பல விஷயங்கள் காரணமாகத்தான் பாகிஸ்தான் அவருக்காக பிரார்த்திக்கின்றது. 

2008 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் ஜோ பிடனுக்கு இரண்டாவது மிக உயர்ந்த சிவில் கவுரவ விருதான 'ஹிலால்-இ-பாகிஸ்தான்' –ஐ வழங்கியது. ஜோ பிடன் மற்றும் செனட்டர் ரிச்சர்ட் லுகர் ஆகியோர், பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியைத் தவிர 1.5 பில்லியன் டாலர் நிதி உதவியை அளிக்க வேண்டும் என்ற திட்டத்தை முன்வைத்தனர். லுகருக்கும் 'ஹிலால்-இ-பாகிஸ்தான்' கவுரவம் வழங்கப்பட்டது. 

அப்போதைய பாகிஸ்தான் அதிபராக இருந்த ஆசிப் அலி சர்தாரி இருவருக்கும் "தொடர்ந்து பாகிஸ்தானை ஆதரித்ததற்காக" நன்றி தெரிவித்திருந்தார். 

தற்போது ஜோ பிடன் அதிபர் ஆனால், இரு நாடுகளுக்கும் இடையிலான பழைய உறவுகள் மீண்டும் மலரும் என்று பாகிஸ்தான் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

டிரம்ப்பின் நேரடியான முன்னோக்கு அணுகுமுறை மற்றும் வழக்கமான அணுகுமுறையை மேற்கொள்ளாத நிலைப்பாடு ஆகியவற்றால் பாகிஸ்தானுக்கு அவரை பிடிக்காமல் போனது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல பொது மன்றங்களில் பாகிஸ்தானை பலமுறை கண்டித்துள்ளார். 

டிரம்பின் ஆட்சிக் காலத்தில், அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து