முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேல்யாத்திரை மதக்கலவரத்தை உருவாக்கும்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து

வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுச்சேரி.  புதுச்சேரியில் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் டெங்கு நோய் உருவாக்கும் கொசுப்புழுக்களை அகற்றும் நிகழ்ச்சி லெனின் வீதியில் உள்ள மணிமேகலை அரசு பெண்கள் பள்ளி அருகே நேற்று நடைபெற்றது. இதில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு டெங்கு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:- 

டெங்கு பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. டெங்கு காய்ச்சலுக்குத் தேவையான மருந்துகள், உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. புதுச்சேரியில் உள்ள அனைத்துத் துறைகளும் வருகிற மழைக்காலத்தை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் உள்ளது. 

 

புதுச்சேரி அமைதியான மாநிலம். எம்மதமும் சம்மதம் என்ற மாநிலம். எல்லா மதத்துக்கும் முன்னுரிமை கொடுக்கும் மாநிலம். மதக்கோட்பாட்டை கடைப்பிடிப்பதால் யாருக்கும் பிரச்சினை கிடையாது. ஆனால் அது மதக்கலவரமாக வரக்கூடாது. பா.ஜ.க.வின் வேல் யாத்திரையின் நோக்கமே மதக்கலவரத்தை உருவாக்குவதுதான். புதுச்சேரியை பொறுத்தவரை எந்தவிதமான மதக்கலவரத்தக்கும் நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். இவ்வாறு முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து