முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கேரள முதல்வர்

சனிக்கிழமை, 7 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது 66-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். கமல்ஹாசனுக்கு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும்படி கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.

கமல்ஹாசனுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பினராய் விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில், அன்புள்ள கமல்ஹாசனுக்கு எனது கனிவான வாழ்த்துகள். அவருடைய பிறந்த நாள் மற்றும் இந்தாண்டு சிறப்பாக அமைய இருக்க வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து