முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

24 மணி நேரத்தில் புதிதாக 50,357 பேருக்கு தொற்று: இந்தியாவில் பாதிப்பு 84.62 லட்சமாக உயர்வு

சனிக்கிழமை, 7 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 84.62 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், 78.19 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் சற்று குறைந்திருக்கிறது. தற்போது தினசரி சுமார் 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேசமயம், குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

புதிய நோய்த்தொற்றுகளை விட குணமடையும் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.   இந்நிலையில், நேற்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 84,62,081 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 50,357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 577 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,25,562 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 78,19,887 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 53,920 பேர் குணமடைந்துள்ளனர்.   நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,16,632 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு 1.48 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 92.41 சதவீதமாக உயர்ந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து