முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனைவிக்கு பிரசவம் இருப்பதால் ஆஸி.க்கு எதிராக கடைசி 2 டெஸ்ட்டில் இருந்து விலக விராட் கோலி முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 8 நவம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்திய கிரிக்கெட் அணி வரும் 27-ம் தேதி முதல் ஆஸ்திரேலியவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒரு நாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஐ.பி.எல். தொடர் முடிந்தபின் துபாயிலிருந்து 12-ம் தேதி புறப்படும் 32 பேர் கொண்ட இந்திய அணியின் வீரர்கள், ஆஸ்திரேலியாவில் 14 நாட்கள் தனிமை முகாமில் இருப்பார்கள்.

அதன்பின் அங்கு பயிற்சியைத் தொடங்குவார்கள். டி.20, ஒரு நாள் போட்டிக்கு பின்னர் டிசம்பர் 17-ம் தேதி டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. முதல் போட்டி அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடத்தப்படுகிறது. 2ம் டெஸ்ட் மெல்போர்னில் டிசம்பர் 26-30 வரை பாக்ஸிங்டே போட்டியாக நடக்கிறது. 3ம் டெஸ்ட் போட்டி ஜனவரி 7-11 வரை சிட்னியிலும், கடைசி மற்றும் 4வது டெஸ்ட் பிரிஸ்பேனில் 15-19ம் தேதிவரையிலும் நடக்கிறது.

இதனிடையே கர்ப்பமாக இருக்கும் கோஹ்லி மனைவி அனுஷ்காவிற்கு ஜனவரியில் பிரசவம் நடைபெற உள்ளது. இதனால் கடைசி  போட்டிகளில் கோஹ்லி விளையாடமாட்டார் என தெரிகிறது. தனது மனைவி மகப்பேறுக்காக விடுப்பு எடுக்க முடிவு செய்திருப்பதால், அவர் கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார்.

வழக்கமான நாட்களாக இருந்தால், ஒரு போட்டியில் மட்டுமே விளையாடாமல் இருப்பார். தற்போது கொரோனா கால தனிமைப்படுத்துதல் உள்ளதால் முதல் இரு டெஸ்ட் போட்டிகளோடு அவர் இந்தியாவுக்கு திரும்பி விடுவார் என பி.சி.சி.ஐ. அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கோஹ்லிக்கு பதிலாக ரகானே அணியை வழிநடத்துவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து