முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனக்கு கொரோனா தொற்று இல்லை: மகிழ்ச்சியாக தெரிவித்த கவுதம் கம்பிர்

ஞாயிற்றுக்கிழமை, 8 நவம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் இருந்த நிலையில், பரிசோதனை மேற்கொண்ட கம்பிர் கொரோனா இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடது கை தொடக்க பேட்ஸ்மேன் கவுதம் கம்பிர். இவர் தற்போது டெல்லி மாநில எம்.பி.யாக உள்ளார். இவர் வீட்டில் உள்ள நபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் கவுதம் கம்பிர் கொரோனா பரிசோதனை மெற்கொண்டு தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். நேற்று அவருக்கு முடிவு கிடைத்துள்ளது. அதில் நெகட்டிவ் என வந்துள்ளது. இதுகுறித்து கவுதம் கம்பிர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

என்னுடைய கொரோனா பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன். பாதுகாப்பாக இருங்கள் எனத் தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து