முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜேம்ஸ் வின்ஸ் கொரோனா தொற்றால் பாதிப்பு

திங்கட்கிழமை, 9 நவம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன் : பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் வருகிற 14-ந் தேதி தொடங்குகின்றன. இதில் முல்தான் சுல்தான் அணிக்காக இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜேம்ஸ் வின்ஸ் விளையாட இருக்கிறார். இதுவரை அவர் ஆடிய 5 போட்டிகளில் 155 ரன்கள் எடுத்துள்ளார். 

இந்நிலையில், ஜேம்சுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவர் லீக் போட்டிகளில் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது. 

அவருக்கு அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. எனினும், அடுத்த பரிசோதனைக்கு அவர் செல்ல தயாராக உள்ளார். அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவுடன் 10 நாட்கள் தன்னை தனிமைப்படுத்தி கொள்ள அவர் முடிவு செய்துள்ளார். 

இதனை தொடர்ந்து அவருக்கு பதிலாக அணியில் ஜோ டென்லி சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கு முன் வங்காளதேச பேட்ஸ்மேன் மகமதுல்லாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் இருந்து அவர் வெளியேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து