முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்: 3 டெஸ்டில் கோலிக்கு ஓய்வு

செவ்வாய்க்கிழமை, 10 நவம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் உள்ளிட்ட போட்டிகளில் விளையாடுகிறது. போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதுபற்றி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியது. 

இதில், பி.சி.சி.ஐ.யின் மருத்துவ குழு அளித்த பரிந்துரையின்பேரில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன. 

இதன்படி நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், 4 டெஸ்ட் போட்டிகளில், கேப்டன் விராட் கோலி அடிலெய்டில் வரும் டிசம்பர் 17ந் தேதி நடைபெறும் முதல் போட்டியில் விளையாடுகிறார். இந்த டெஸ்ட் பகல், இரவு போட்டியாக இருக்கும். அவரது மனைவி அனுஷ்கா கர்ப்பிணியாக உள்ள நிலையில், அவருக்கு தந்தைக்கான விடுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதனால், முதல் போட்டியில் விளையாடிய பின் கோலி விடுமுறையில் நாட்டுக்கு திரும்புகிறார். 

இதேபோன்று ஒரு நாள் போட்டி மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்திக்கு 3 சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டு உள்ளது. அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அணியில் இடம்பெறுவார். 

ஒரு நாள் போட்டிக்கான தொடரில் விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் உடன் மற்றொரு வீரராக சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டு உள்ளார். 

விருத்திமான் சஹாவுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. அதனால் அவரை அணியில் சேர்ப்பது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும் என பி.சி.சி.ஐ. தெரிவித்து உள்ளது. 

டி20க்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் (துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, தீபக் சாஹர், நடராஜன். 

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், சுப்மான் கில், கே.எல்.ராகுல் (துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, மயங்க் அகர்வால், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்குர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்). 

இந்திய டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், பிருத்வி ஷா, கே.எல்.ராகுல், புஜாரா, அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, சுப்மான் கில், விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ரிஷாப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், முகமது சிராஜ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து