முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்கள் டி 20 கிரிக்கெட் சூப்பர் நோவாசை வீழ்த்தி சாம்பியனானது டிரைல்பிளாசர்ஸ்

செவ்வாய்க்கிழமை, 10 நவம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சார்ஜா : இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 3-வது பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் நடைபெற்றது. 

இதில் நடப்பு சாம்பியன் சூப்பர் நோவாஸ் மற்றும் டிரைல்பிளாசர்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. டாஸ் வென்ற சூப்பர் நோவாஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி டிரைல்பிளாசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். 

அந்த அணியில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். அவர் 68 ரன்னில் அவுட்டானார். தீந்திரா டாடின் 20 ரன்னும், தீப்தி சர்மா 10 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். 

இறுதியில் டிரைல்பிளாசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தது. 

சூப்பர் நோவாஸ் சார்பில் ராதா யாதவ் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினர். 

இதையடுத்து, 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சூப்பர் நோவாஸ் அணி இறங்கியது. 

அந்த அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 30 ரன்னும், சசிகலா சிரிவர்தனே 19 ரன்னும், தனியா பாட்டியா 14 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். 

இறுதியில், சூப்பர் நோவாஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதன்மூலம் டிரைல்பிளாசர்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து