முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2021 ஜிம்னாஸ்டிக்ஸ் உலக சாம்பியன்ஸ் போட்டி: ஜப்பான் நடத்துகிறது

செவ்வாய்க்கிழமை, 10 நவம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டோக்கியோ : தெற்கு ஜப்பானிய நகரமான கிடாக்யுஷுவில்ல் 2021ஆம் ஆண்டுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலை ஜிம்னாஸ்டிக்ஸ் ( Artistic gymnastics) நடக்க உள்ளது என்று இன்டர்நேஷனல் ஜிம்னாஸ்டிக் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது ஒரே ஆண்டில் இரண்டு உலக சாம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக் போட்டிகளையும் ஒரு நகரம் நடத்துவது இதுவே முதல் முறையாகும். 

ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள், 2021 அக்டோபர் 17 முதல் 24 வரை நடைபெறும், அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு தாள ஜிம்னாஸ்டிக் போட்டி தொடங்குகிறது. 

கலை ஜிம்னாஸ்டிக் போட்டியை நடத்துவதில் இருந்து ஜூலை மாதம் டென்மார்க் (Denmark) விலகிய பின்னர், 2021 உலக சாம்பியன்ஷிப் எங்கு நடத்தப்படும் என்ற கேள்விகள் எழுந்தன. தற்போது அதற்கான பதில் கிடைத்துவிட்டது. 

ஜிம்னாஸ்டிக் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறும். ஆனால் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ஆண்டுகளில் மட்டும் நடைபெறாது. 

டோக்கியோவில் நடைபெற்ற ஒரு நட்பு ஜிம்னாஸ்டிக் நிகழ்வில் இன்டர்நேஷனல் ஜிம்னாஸ்டிக் கூட்டமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிகழ்வில் ரஷியா, சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீரர்கள் கலந்துக் கொண்டனர. இந்த போட்டியானது, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு முன்னதாக நடைபெறும் பெரிய சோதனை போட்டியாக கருதப்படுகிறது. 

ஜப்பான் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் ஜிம்னாஸ்டிக்ஸ் உலக சாம்பியன்ஷிப்பை நடத்தியிருக்கிறது. கடைசியாக 2011ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து