டென்னிஸ் தர வரிசை - ரோஜர் பெடரருக்கு பின்னடைவு

வெள்ளிக்கிழமை, 13 நவம்பர் 2020      விளையாட்டு
Roger-Federer 2020 11 08

Source: provided

பாரீஸ்  டென்னிஸ் வீரர்களின் தர வரிசை பட்டியலை ஏ.டி.பி. வெளியிட்டுள்ளது. அதன்படி ஜோகோவிச் (செர்பியா) தொடர்ந்து முதல் இடத்திலும், ரபேல் நடால் (ஸ்பெயின்) 2-வது இடத்திலும் உள்ளனர்.

காயம் காரணமாக இந்த ஆண்டில் பெரும்பாலான போட்டிகளில் விளையாடாத ரோஜர் பெடரருக்கு தர வரிசையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அவர் தற்போது 5-வது இடத்துக்கு பின் தங்கிய நிலையில் உள்ளார்.

டென்னிஸ் உலகில் ரோஜர் பெடரரும், ரபெல் நடாலும் தான் அதிக கிராண்ட் சலாம் பட்டங்களை வென்று உள்ளனர். இருவரும் தலா 20 கிராண்ட் சலாம்களை வென்று சாதித்து உள்ளனர்.

ஆஸ்திரியாவை சேர்ந்த டெமினிக் தீம் 3-வது இடத்தில் உள்ளார். சமீபத்தில் நடந்த பாரீஸ் மாஸ்டர் போட்டியில் வெற்றி பெற்ற ரஷ்யாவின் மெட்வதேவ் 4-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-வது இடத்திலும், அலெக்சாண்டர் சுவெரேவ் (ஜெர்மனி) 7-வது இடத்திலும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து