முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோழிப்பண்ணை வணிகத்தில் கால்பதிக்கும் எம்.எஸ்.டோனி

வெள்ளிக்கிழமை, 13 நவம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி  இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான எம்எஸ் டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் கிரிக்கெட் தவிர மற்ற தொழில்களிலும் முதலீடு செய்து வருகிறார். சமீபத்தில் மனைவியுடன் இணைந்து பொழுதுபோக்கு துறையில் அடியெடுத்து வைத்தார். 

இவருக்கு ராஞ்சியில் பண்ணை வீடு உள்ளது. இவருக் இயற்கை உர விவசாயத்தில் அதிக ஈடுபாடு உண்டு. தர்பூசணியை இயற்கை உரத்தில் அதிக அளவில் மகசூல் பெறுவது எப்படி என்பதை கற்றுக்கொண்டதாக ஏற்கனவே பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் கோழிப்பண்ணை வணிகத்தில் கால் பதிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய பிரதேச மாநிலம் ஜபுவா மாவட்டத்தில் உள்ள தண்ட்லா என்ற இடத்தில் வினோத் மேத்தா என்பவர் கதக்நாத் கோழி பண்ணை வைத்துள்ளார். அவரிடம் இருந்து 2000 கோழிகள் வாங்குவற்கு டோனியின் பண்ணையை நிர்வகிக்கும் மானேஜர் ஆர்டர் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதை உறுதி செய்துள்ள வினோத் மேத்தா, ‘‘டோனியின் பண்ணை மானேஜர் கிரிஸ் விகாஸ் கேந்த்ரா மற்றும் எம்.பி.கதக்நாத் மொபைல் போன் ஆப் மூலம் தொடர்பு கொண்டார்.

அப்போது 2000 கோழிக்கான ஆர்டரை பெற்றேன். டிசம்பர் மாதம் 15-ந்தேதி ராஞ்சியில் டெலிவரி செய்ய இருக்கிறேன். முன் பணம் ஏற்கனவே என்னுடைய அக்கவுண்ட்டில் செலுத்தப்பட்டுவிட்டது. பிரபலான எம்.எஸ்.டோனியின் பண்ணைக்கு கதக்நாத் கோழியை வழங்க இருப்பதில் பெருமை அடைகிறேன்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து