முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லங்கா பிரிமீயர் லீக்கில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்

புதன்கிழமை, 18 நவம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கொழும்பு : இலங்கை கிரிக்கெட் வாரியம் லங்கா பிரிமீயர் லீக் என்ற பெயரில் டி20 லீக்கை அறிமுகம்படுத்தியது. இந்தத் தொடர் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. இதில் ஐந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

ஐந்து அணிகளில் கண்டி டஸ்கர் அணியும் ஒன்று. அந்த அணி இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான முனாப் பட்டேலை ஒப்பந்தம் செய்துள்ளது. முனாப் பட்டேல் இந்திய அணிக்காக 13 டெஸ்ட், 70 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 

ஏற்கனவே இர்பான் பதானை கண்டி டஸ்கர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது 2-வது வீரராக முனாப் பட்டேலை ஒப்பந்தம் செய்துள்ளது. 

அதேவேளையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது தொடரில் இருந்து விலகியுள்ளார். சர்பராஸ் அகமது காலே கிளாடியேட்டர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். நியூசிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் அணியில் சர்பராஸ் அகமது இடம் பிடித்துள்ளார். அதனால் லங்கா பிரிமீயர் லீக்கில் இருந்து விலகியுள்ளார். 

சொந்த வேலைக்காரணமாக ஐ.பி.எல். தொடரில் இருந்து மலிங்காக விலகினார். இந்தத் தொடரிலும் விளையாட வாய்ப்பில்லை எனக் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து