2021ம் ஆண்டு இங்கிலாந்தில் 5 டெஸ்ட் விளையாடும் இந்திய அணி: போட்டி அட்டவணை அறிவிப்பு

வியாழக்கிழமை, 19 நவம்பர் 2020      விளையாட்டு
Indian-team 2020 11 10

Source: provided

லண்டன் : 2021ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி 2018-ம் ஆண்டு இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1-4 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இந்த நிலையில் இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இந்திய மண்ணில் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதைத் தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

கொரோனா அச்சத்தால் இந்த ஆண்டில் இங்கிலாந்தில் சில சர்வதேச தொடர்கள் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்கள் அணி அடுத்த ஆண்டில் (2021) உள்நாட்டில் விளையாடும் போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டது.

இதன்படி அடுத்த ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 4-ந் தேதி முதல் 8–ந் தேதி வரை நாட்டிங்கம்மிலும்,

2-வது டெஸ்ட் ஆகஸ்ட் 12-ந் தேதி முதல் 16–ந் தேதி வரை லார்ட்ஸிலும், 3-வது டெஸ்ட், ஆகஸ்ட் 25-ந் தேதி முதல் 29–ந் தேதி வரை லீட்ஸிலும், 4-வது டெஸ்ட் செப்டம்பர் 2-ந் தேதி முதல் 6–ந் தேதி வரை தி ஓவலிலும், 5-வது டெஸ்ட் செப்டம்பர் 10-ந் தேதி முதல் 14–ந் தேதி வரை மான்செஸ்டரிலும் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து