முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 2000 அபராதம் விதிக்கப்படும்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவு

வியாழக்கிழமை, 19 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். 

டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸால், ஹாட்ஸ்பாட் பகுதிகள் மற்றும் காய்கறிச் சந்தைப் பகுதிகளில் மீண்டும் சில நாட்களுக்கு ஊரடங்கைக் கொண்டு வர மத்திய அரசிடம் டெல்லி முதல்வர்  கெஜ்ரிவால் அனுமதி கோரினார்.

டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் 3-வது அலை வீசுகிறது. டெல்லியில் மட்டும் தற்போது 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் சிகிச்சையில் உள்ளார்கள். 

இந்த நிலையில் கெஜ்ரிவால் கூறியதாவது,  டெல்லி அரசின் அனைத்து அமைப்புகளும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரு மடங்கு உழைத்து வருகின்றன.

டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்தவுடன் திருமணங்கள், கூட்டங்கள், விசேஷங்கள் ஆகியவற்றில் மக்கள் பங்கேற்கும் அளவை 200 பேருக்கு மேல் அதிகரித்தோம்.

ஆனால் இப்போது அந்த அனுமதியைத் திரும்பப் பெற்று விட்டோம். 50 நபர்களுக்கு மேல் திருமணம், விஷேசம், கூட்டங்கள் ஆகியவற்றில் பங்கேற்க அனுமதியில்லை என்று கெஜ்ரிவால் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து