முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் துப்பாக்கி சண்டை: 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

வியாழக்கிழமை, 19 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே கடந்த துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்து நாசவேலைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளை ஒழிக்க ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ராணுவத்தின் தேடுதல் வேட்டையில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், ஜம்மு மாவட்டம் நக்ரோட்டா நகரில் உள்ள பான் சுங்கச்சாவடி நோக்கி நேற்று அதிகாலையில் பயங்கரவாதிகள் வாகனத்தில் வருவதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். அப்போது ஒரு வாகனத்தை சோதனையிட முயன்ற போது, உள்ளே இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.  இந்த என்கவுண்டர் காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.

அப்பகுதிக்கு ஏராளமான ராணுவ வீரர்கள் விரைந்தனர். பயங்கரவாதிகள் இருந்த வாகனத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் நீடித்த இந்த சண்டையில் 4 பயங்கரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். பயங்கரவாதிகள் பயன்படுத்திய 11 ஏகே-47 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.   

சம்பா செக்டாரில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவி நக்ரோட்டா சுங்கச்சாவடி நோக்கி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாக சி.ஆர்.பி.எப். தெரிவித்துள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து