வர்ணனையாளர் குழுவில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2020      விளையாட்டு
Sanjay-Manjrekar 2020 11 20

Source: provided

மும்பை : இந்திய அணி போட்டிக்கான வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கப்பட்ட சஞ்ச் மஞ்ச்ரேக்கர் ஆஸ்திரேலியா தொடரில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் டெலிவிசன் வர்ணனையாளராக உள்ளார். இவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின்போது நேரடி வர்ணனையின்போது இந்திய அணி வீரர்களை குறைத்து பேசினார்.

குறிப்பாக ரவீந்திர ஜடேஜாவை மட்டம் தட்டி பேசினார். ஜடேஜா நேரடியாக பதிலடி கொடுத்ததுடன் பி.சி.சி.ஐ-யில் புகார் செய்தார். இதனால் இந்திய அணி விளையாடும் போட்டிக்கான வர்ணனை குழுவில் இருந்து நீக்கப்பட்டார். தனது தவறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான போட்டியை நேரடியாக வர்ணனை செய்யும் குழுவில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இடம் பிடித்துள்ளார். ஆங்கிலம் மற்றும் இந்தியில் அஜித் அகர்கர், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஹர்ஷா போக்லோ, முரளி கார்த்திக், அஜய் ஜடேஜா ஆகியோர் வர்ணனை செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியில் சேவாக், முகமது கைஃப், விஜய் தாஹியா, விவேக் ரஸ்தான், ஜாகீர் கான் ஆகியோரும் ஆங்கிலத்தில் மெக்ராத், நிக் நைட்டும் வர்ணனை செய்கிறார்கள். 

இந்திய அணி நவம்பர் 27-ம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை ஒருநாள் போட்டியிலும், டிசம்பர் 4-ந்தேதியில் இருந்து டிசம்பர் 8-ந்தேதி வரை டி20 போட்டியிலும், டிசம்பர் 17-ல் இருந்து ஜனவரி 19-ந்தேதி வரை டெஸ்ட் போட்டியிலும் விளையாடி இருக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து