முக்கிய தலைவர்களுக்கு கடிதங்கள் மூலம் கொரோனா தொற்றை பரப்ப சதித் திட்டம் ;194 நாடுகளுக்கு இன்டர்போல் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2020      இந்தியா
corona virus

Source: provided

புதுடெல்லி : சர்வதேச அளவில் முக்கிய தலைவர்களுக்கு கொரோனா வைரஸ் தடவிய கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக இன்டர்போல் எச்சரித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்த நிலையில் சர்வதேச காவல்துறை ஆணையமான இன்டர்போல், இந்தியா உள்ளிட்ட 194 நாடுகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில் முக்கிய தலைவர்களுக்கு வரும் கடிதங்கள் மூலமாக கொரோனா தொற்றை பரப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் அந்த தலைவர்கள் என்ற விவரம் எதுவுகம் குறிப்பிடப்படவில்லை.

எனவே முக்கிய தலைவர்களின் அலுவலகங்களில் பணிபுரியவர்களை தினமும் கண்காணிக்க வேண்டும் என்றும் கடிதங்கள் உள்ளிட்டவற்றை முழுமையாக பரிசோதிக்க வேண்டும் என்றும் இன்டர்போல் அறிவுறுத்தி உள்ளது. எக்காரணத்தை கொண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அலட்சியம் கூடாது என்றும் இன்டர்போல் அறிவுரை வழங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து