லடாக்கில் வாகன விபத்தில் தமிழக வீரர் மரணம்: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க முதல்வர் எடப்பாடி உத்தரவு

வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2020      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : லடாக் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் நாயக் கருப்பசாமியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

காஷ்மீர், லடாக் பகுதியில், இந்திய ராணுவத்தின் ஆர்ட்டிலெரி படைப் பிரிவில் பணியாற்றி வந்த, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், திட்டான்குளம் கிராமத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் நாயக் கருப்பசாமி (த/பெ. கந்தசாமி) என்பவர் 18.11.2020 அன்று  எதிர்பாராத விதமாக வாகன விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து  நான் மிகுந்த துயரம்  அடைந்தேன். உயிரிழந்த இராணுவ வீரர் நாயக் கருப்பசாமியின் குடும்பத்திற்கு  எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இராணுவ வீரர் நாயக் கருப்பசாமியின்  குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும்  மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.  இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த இராணுவ வீரர் நாயக் கருப்பசாமியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்க நான்  உத்தரவிட்டுள்ளேன்.  இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து