லடாக் மோதல் விவகாரம்: சீனாவுடன் அமைதி பேச்சு தொடரும் - மத்திய அரசு

வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2020      இந்தியா
central-government 2020 11 12

Source: provided

புது டெல்லி : லடாக் மோதல் விவகாரத்தில் சீனாவுடன் அமைதி பேச்சுவார்த்தை தொடரும் என வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

லடாக் மோதலால் இந்தியா - சீனா எல்லையில் நிலவும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வந்து, அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் கடைசியாக இருநாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே 8-வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த 6-ம் தேதி நடந்தது.  இந்த நிலையில் லடாக் எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக இருதரப்பும் பேச்சுவார்த்தைகளை தொடரும் என மத்திய அரசு கூறியுள்ளது.   

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறுகையில்,

இரு நாடுகளும் தூதரகம் மற்றும் ராணுவம் மூலம் தொடர்பையும், பேச்சுவார்த்தையையும் தொடர ஒப்புக்கொண்டுள்ளன. அங்கு படைகளை விலக்கி அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை விரைவில் நடத்தவும் முடிவு செய்துள்ளன என்று தெரிவித்தார்.  லடாக்கில் இருந்து இந்திய வீரர்களை வெளியேற்ற சீன ராணுவம் நுண்ணலை ஆயுதங்களை பயன்படுத்தியதாக இங்கிலாந்து நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டு இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த தகவல்கள் ஆதாரமற்றவை எனவும், இது குறித்து ராணுவம் ஏற்கனவே தெளிவுபடுத்தி இருப்பதாகவும் உறுதிபட தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து