மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிக்கு அடிக்கல்: ரூ.380 கோடியில் புதிய நீர்த்தேக்க திட்டத்தை அர்ப்பணித்தார் அமித்ஷா

ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2020      தமிழகம்
Amitsha 2020 09 13

Source: provided

சென்னை : பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா 2 நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர், துணை முதல்வர், தமிழக அமைச்சர்கள், பா.ஜ.க. மூத்த, முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பின்னர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.  ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிக்கும்,  ரூ.309 கோடியில் சென்னை வர்த்தக மையம் விரிவுபடுத்தும் திட்டத்திற்கும் அமித்ஷா அடிக்கல் நாட்டினார், 

அதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்க திட்டத்தை  மக்கள் பயன்பாட்டிற்கு அவர் அர்ப்பணித்தார்.  கரூர் மாவட்டம் நஞ்சை புகளூரில் ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டத்திற்கும்,  கோவை - அவினாசி சாலையில் ரூ.1,620 கோடியில் உயர்மட்ட சாலைத்திட்டத்திற்கும்,  வல்லூரில் ரூ.900 கோடியில் இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோலிய முனையத்திற்கும்,   அமுல்லைவாயிலில் ரூ.1400 கோடியில் Lube Plant அமைக்கும் திட்டத்திற்கும் அமித்ஷா  அடிக்கல் நாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து