முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலியோ ஒழிப்பில் தனியார் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றின: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் புகழாரம்

ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : போலியோ ஒழிப்பில் தனியார் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றின என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.

சி.ஐ.ஐ. நடத்திய ஆசிய சுகாதார மாநாட்டில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேசியதாவது:-

இந்திய சுகாதாரத்துறை, வருவாய் மற்றும் வேலைவாய்ப்பில் மிகப் பெரிய துறை. இதன் சந்தை மதிப்பு 2022-ம் ஆண்டுக்குள் 3 மடங்கு உயர்ந்து ரூ.8.6 டிரில்லியனாக அதிகரிக்கவுள்ளது. சுகாதார சேவை அனைவருக்கும் மலிவான விலையில் கிடைக்க வேண்டும் என்பதை கொரோனா பாதிப்பு உணர்த்தியுள்ளது.  ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் செயல்படும் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், அனைத்து மக்களுக்கும் மலிவான சுகாதார சேவை கிடைக்க வழி செய்துள்ளது.

தகவல் தொழில்நுட்பத்தை, கோவிட்டுக்கு எதிரான போராட்டத்துக்கு மட்டும் சுகாதாரத்துறை பயன்படுத்தவில்லை. கோவிட் அல்லாத அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொலைதூர மருத்துவ ஆலோசனை பெறும் இ-சஞ்சீவனி திட்டத்தில் 8 லட்சம் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. 

கோவிட்டுக்கு எதிரான பேராட்டத்தில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை பங்களிப்பு முக்கியமானது. தனிநபர் பாதுகாப்பு உடைகளை நாம் அதிகளவில் உற்பத்தி செய்கிறோம். மருத்துவ மாதிரிகளை முன்பு பரிசோதனை செய்ய அட்லாண்டாவுக்கு அனுப்பினோம். தற்போது, இங்குள்ள தனியார் பரிசோதனைக் கூடங்களிலேயே பரிசோதனைகள் நடக்கின்றன. போலியோ ஒழிப்பில் தனியார் நிறுவனங்கள் மிகப் பெரிய பங்காற்றின. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து