ஐ.எஸ்.எல். கால்பந்து தொடங்கியது : கேரளாவை வீழ்த்தியது கொல்கத்தா

ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2020      விளையாட்டு
Football 2020 11 10

Source: provided

பனாஜி : 7-வது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த தொடர் மார்ச் மாதம் வரை நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக்கான போட்டிகள் அனைத்தும் ஒரே மாநிலத்தில் அதாவது கோவாவில் ரசிகர்கள் இன்றி அரங்கேறுகிறது. 

பாம்போலிம்மில் உள்ள ஜி.எம்.சி. தடகள ஸ்டேடியத்தில் நடைபெற்ற தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஏ.டி.கே. மோகன் பகான் அணி, கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொண்டது. 

முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 67வது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் ராய் கிருஷ்ணா ஒரு கோல் அடித்தார். 

இறுதியில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை 1-0 என்ற கணக்கில் கொல்கத்தா அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 

கொரோனா பரவல் தொடங்கிய 8 மாதத்துக்கு பிறகு இந்தியாவில் நடைபெறும் முதலாவது பெரிய போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து