வட தமிழகத்தில் கன மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

வியாழக்கிழமை, 26 நவம்பர் 2020      தமிழகம்
Weather-Center 2020 11 12

அதி தீவிர புயலாக நள்ளிரவு கரையைக் கடக்கத்தொடங்கிய நிவர் புயல், தீவிர புயலாக வலுவிழந்து நேற்று முன் தினம் இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கரையை கடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: 

அதி தீவிர புயல் நிவர், புதுவை அருகே இரவு 11.30 மணிக்கும் அதிகாலை 2.30 மணிக்கும் இடைப்பட்ட காலத்திற்கு இடையே கரையக் கடந்தது. தற்போது அது வலுவிழந்து தீவிர புயலாக உள்ளது. தொடர்ந்து இந்தப் புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்து வரும் 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும். இதன் காரணமாக வட தமிழக மாவட்டங்களில் மழை தொடரும். பலத்த காற்றும் வீசக்கூடும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து