என் ஹீரோ மறைந்துவிட்டார்: மரடோனா மறைவுக்கு கங்குலி இரங்கல்

வியாழக்கிழமை, 26 நவம்பர் 2020      விளையாட்டு
Ganguly-2020-11-26

அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் மரடோனா தனது 60-வது வயதில் மாரடைப்பினால் காலமானார். அவரது மறைவுக்கு விளையாட்டு பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

அவரது மறைவுபற்றி பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், என்னுடைய ஹீரோ மறைந்து விட்டார். உங்களுக்காகவே நான் கால்பந்து போட்டிகளை பார்த்தேன். நான் தீவிர பைத்தியமாக இருந்த மேதை ஆழ்ந்த அமைதியடைந்து விட்டார் என தெரிவித்து உள்ளார். 

பிரேசில் கால்பந்து வீரர் பீலே வெளியிட்ட செய்தியில், எனது சிறந்த நண்பர். கால்பந்து மேதையை உலகம் இழந்து விட்டது. ஒரு நாள் வானில் நாங்கள் ஒன்றாக கால்பந்து விளையாடுவோம் என்று தெரிவித்து உள்ளார். மரடோனா மறைவுக்கு கால்பந்து பிரபலங்களான லயோனல் மெஸ்சி, ரொனால்டோ உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர். 

இதேபோன்று சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், கால்பந்து லெஜண்ட் மரடோனா மறைவு அதிர்ச்சி அளிக்கிறது என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கரா, தடகள வீரர் உசைன் போல்ட் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து