முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மம்தாவுக்கு எதிர்ப்பு: மே.வங்க மூத்த அமைச்சர் திடீர் ராஜினாமா

வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : மம்தா பானர்ஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் மூத்த அமைச்சர் சுவேந்து அதிகாரி திடீர் ராஜினாமா செய்து உள்ளார்.

மேற்குவங்கத்தில் அதிருப்தி திரிணாமுல் காங்கிரஸ் மூத்த அமைச்சர் சுவேந்து அதிகாரி  தந்து போக்குவரத்து துறை அமைச்சர் பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ம்மதா பானர்ஜிக்கு அனுப்பினார் மற்றும் ஒரு நகலை கவர்னர் ஜகதீப் தங்கருக்கு மின்னஞ்சலில் அனுப்பி உள்ளார். 

இவர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிசேக் பானர்ஜிக்கு கட்சியில்  கொடுக்கப்படும் முக்கியத்துவத்தாலும், தேர்தல் திட்ட வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் தலையீட்டாலும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இன்னும் 6 மாதத்தில் மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமைச்சரின் ராஜினாமா முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து