3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சனிக்கிழமை, 28 நவம்பர் 2020      தமிழகம்
TN-assembly 2020 11 07

Source: provided

சென்னை : தமிழகத்தில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அதன்படி தமிழ்நாடு ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறை முதன்மை செயலாளராக ராஜேஷ் லக்கானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை செயலாளராக கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.   

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலராக ஷன்சொங்கம் ஜடாக் சிரு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து