முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தொற்றை கண்டறியும் புதிய முறைக்கு ஐ.சி.எம்.ஆர். குழு ஒப்புதல்

சனிக்கிழமை, 28 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா தொற்றை கண்டறிவதற்கான புதிய முறைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா தொற்றை கண்டறிவதற்கான புதிய முறைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுவின் (சி.எஸ்.ஐ.ஆர்) உறுப்பு ஆய்வகமான ஐதராபாத்தில் உள்ள செல்கள் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (சி.சி.எம்.பி) உருவாக்கியுள்ள கொரோனா தொற்றை கண்டறிவதற்கான புதிய முறைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போதுள்ள தங்க தரச்சான்று பெற்ற ஆர்.டி-பி.சி.ஆர் முறையை சற்றே மாறுதலுக்கு உட்படுத்தி செல்கள் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் உருவாக்கியுள்ள நேரடி காய்ந்த மூக்கு திரவம் (டிரை ஸ்வாப்)  ஆர்.டி-பி.சி.ஆர் சோதனையை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.இதை செயல்படுத்துவதன் மூலம் புதிதாக எந்த முதலீடும் செய்யாமல் பரிசோதனைகளின் அளவை 2 முதல் 3 மடங்கு வரை அதிகரிக்கலாம்.

இதற்கு தேவைப்படும் குறைந்த செலவு மற்றும் நேரத்தை கருத்தில் கொண்டு இந்த பரிசோதனையை பின்பற்றுவதற்கான அறிவுரையை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு வழங்கியுள்ளது. ஏப்ரல் 2020 முதல் கொரோனா வைரஸ் மாதிரிகளை ஐதராபாத்தில் உள்ள செல்கள் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் கையாண்டு வருகிறது.

தெலுங்கானாவில் உள்ள சுகாதாரப் பணியாளர்களோடு நெருங்கி பணிபுரிந்த பிறகு பரிசோதனையை தாமதமாக்கும் சில விஷயங்களை இம்மையம் கண்டறிந்தது. இதைத் தொடர்ந்து இந்த புதிய முறையை உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து