முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் தொடர்ந்து 3-வது முறையாக தமிழகத்தை கொண்டு சென்று

ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

ஹாட்ரிக் சாதனை படைத்த முதல்வருக்கு நன்றி: அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தீர்மானம் 

மதுரை : அம்மா பேரவை மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், வருவாய் பேரிடர் மேலாண்மை துறை  அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் ஆலோசனை வழங்கினார்.  

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். சரவணன், கே.மாணிக்கம், பெரியபுள்ளான் என்ற செல்வம், பா.நீதிபதி, மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே. தமிழரசன், அம்மா பேரவை இணைச் செயலாளர் இளங்கோவன், அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட நிர்வாகிகள் ஐயப்பன், திருப்பதி, பஞ்சம்மாள், பஞ்சவர்ணம், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், ரவிச்சந்திரன்,செல்லம்பட்டிராஜா, பிச்சைராஜன், நகரச் செயலாளர் பூமாரராஜா, பேரூர் செயலாளர்கள் கொரியர் கணேசன், அழகுராஜா, குமார், நெடுமாறன், பாலசுப்ரமணி, மாவட்ட அணி நிர்வாகிகள் தமிழழகன், வக்கீல் தமிழ்ச்செல்வன், சிங்கராஜ பாண்டியன் ,பால்பாண்டி, காசிமாயன் ,லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது, 

இந்தியாவிலே அன்னை தமிழகத்தை முதன்மை தேசமாக உருவாக்கும் வண்ணம் இரவு பகலாக மக்களுக்காக பணியாற்றி அம்மாவை எண்ணத்தை நனவாக்கும் வண்ணம் இன்றைக்கு தொடர்ந்து மூன்றாம் முறையாக ஹாட்ரிக் சாதனை படைக்கும் வகையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியுள்ளார் முதல்வர். அவருக்கு உறுதுணையாக துணை முதல்வரும், அமைச்சர் பெருமக்களும் இருந்து வருகின்றனர். மதுரையில் முதன்முதலாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது அப்போது மதுரைக்கு குடிநீர் பிரச்சினை தீர்க்கும் வண்ணம் 1200 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணியினை முதல்வர் அறிவித்தார். இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகின்ற 4-ம் தேதி மதுரை ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதனை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.  அதே போல் 33 கோடியில் வெள்ளை மாளிகை போல் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலக கட்டிட திறப்பு விழா நடைபெறுகிறது. இதனையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.  மதுரைக்கு வருகை தரும் முதல்வருக்கு அம்மா பேரவை சார்பிலும் மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தின் சார்பிலும் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படுகிறது. 

முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் இதயத்தை ஆசியோடு நடைபெறும் அம்மா கிச்சன் 150 நாளை அடைந்துள்ளது. இந்த 150 நாளில் மூன்று வேளை உணவு, இருவேளை தானிய உணவுகள் வழங்கப்பட்டன. இதுவரை 9 லட்சம் உணவு பொட்டலங்களும், 6 லட்சம் தானிய பொட்டலங்களும் ஆக மொத்தம் 15 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மதுரை மாவட்டத்தில் நோய்தொற்று 18 சதவீதமாக இருந்தது முதல்வர்  பல்வேறு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கினார்.  அதன்படி மதுரை மாவட்ட நிர்வாகம் செயல்பட்டதால் இன்றைக்கு இந்த தொற்றுநோய் 0.5 சகிதமாக மதுரை மாவட்டத்தில் உள்ளது. 

தற்பொழுது உணவு தேவை எழவில்லை என்று மாவட்ட ஆட்சித் தலைவரும், மருத்துவ குழுவும் கூறியுள்ள நிலையில் தற்போது அம்மா கிச்சன் நிறைவு பெறவுள்ளது. இது நிரந்தரமாக அல்ல. தேவை ஏற்பட்டால் மீண்டும் அம்மா கிச்சன் திறக்கப்படும்.  சமீபத்தில் ஏற்பட்ட நிவர் புயலில்களில் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து உயிர் சேதம் இல்லாமல் பொருள் சேதம் இல்லாமல் தமிழகத்தை முதல்வர் காப்பாற்றி உள்ளார். இந்தியாவில் எந்த மாநில முதல்வரும்  செய்திராத வகையில் கட்டுப்பாட்டு அறைக்கு நேரடியாக வந்துஅறிவுரை வழங்கினார் முதல்வர். 

அதுமட்டுமல்லாது நீர் நிலைகளை ஆராய்ந்து கண்காணித்து அதற்கு தகுந்தார்போல் உபரி நீரை வெளியேற்றி தற்போது மழைநீர் வீணாகாமல் அனைத்து நீர்நிலைகளிலும் 100 சகவீதம் நீர் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் தற்பொழுது குறைந்த காற்றழுத்த மண்டத்தால் புதிதாக புயல் ஏற்படும் சூழல் உருவாகவும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி தொடர்ந்து அது கேட்டு நடவடிக்கையை முதல்வர் முன்கூட்டியே எடுத்து வருகிறார். முதல்வரின்  நடவடிக்கையை கண்டு பாரத பிரதமரும்,  உள்துறை அமைச்சரும் பாராட்டி வருகின்றனர். இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார். தற்போது கூட கனிமொழி எடப்பாடியில் பிரச்சாரம் செய்யப் போவதாக கூறியுள்ளார். கனிமொழி விண்வெளிக்கு சென்று பிரச்சாரம் செய்தால் கூட ஒருபோதும் தி.மு.க. ஆட்சிக்கு வர முடியாது. தி.மு.க. ஓட்டுக்காக தன் மக்களை சந்திப்பார்கள். ஆனால் நாங்கள் அப்படி இல்லை. தினந்தோறும் மக்களை சந்தித்து அவர்களின் தேவையை அறிந்து செயல்படும் அரசாக அம்மா அரசு திகழ்கிறது.

தி.மு.க. மக்களை குழப்பி திசை திருப்பி முதல்வர்  செய்யும்  சாதனைத் திட்டங்களை மறைக்க முயற்சி செய்கிறது. அது ஒருபோதும் நடக்காது. ஏனென்றால் மக்கள் ஒவ்வொரு நிமிடமும் கண்காணிப்பு தான் வருகின்றனர்.  ஆகவே தி.மு.க.வின் பொய் பிரச்சாரம் பொதுமக்களிடத்தில எடுபடாது. இவ்வாறு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார். 

அதனைத் தொடர்ந்து கீழ்க்கண்ட தீர்மானத்தை அமைச்சர் ஆர் .பி உதயகுமார் நிறைவேற்றினார். 

இந்தியாவிலே உள்ள 29 மாநிலங்களில் அன்னை தமிழகத்தை முதன்மை தேசமாக உருவாக்குவேன் என்ற அம்மாவின் சபதத்தை நனவாக்கும் வண்ணமும், இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகாலம் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அம்மாவின் தெய்வ வாக்கை தங்களின் இலட்சிய முழக்கமாக கொண்டு முதல்வரும், அவருக்கு உறுதுணையாக துணை முதல்வரும் இரவு பகல் பாராது அயராது பாடுபட்டு வருவதை தமிழ்ச் சமுதாயம் நன்கு அறியும். 

உலகில் உள்ள 200 நாடுகள் அஞ்சி நடுங்கிய கொரோனோ என்ற வைரஸ் நோயை கட்டுப்படுத்த மாவட்டம் தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தி ,தொடர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கைகாகவும், நிவாரண உதவி வழங்கிடவும் தமிழக அரசின் சார்பில் 7,525 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மக்களை காத்திட்டு இதன் மூலம் தமிழகம் மற்ற மாநிலங்களை காட்டிலும் முன்மாதிரியாக  திகழ்கிறது என்றும் தமிழகத்தை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று பாரதப் பிரதமரின் பாராட்டைப் பெற்றது மட்டுமல்லாது,  தற்பொழுது நிவர் புயலில் இருந்து மக்களைக் காத்திடும் வண்ணம் புயலை காட்டிலும் அதிவேகமாக போர்க்கால நடவடிக்கை எடுத்து அதன் மூலம் உயிர் சேதம் ஏற்படாமலும்,பொருள் சேதம் ஏற்படாமலும் காத்திட்டு இதன் மூலம் பாரதப் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் பாராட்டைப் பெற்று இயற்கை சீற்றங்களில் இருந்து எப்படி மக்களை காப்பது என்ற புதிய இலக்கணத்தை உருவாக்கியும், 

இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதம் இருந்த போதிலும் தனது அயராத உழைப்பால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை 8.03 சதவீதம் உயர்த்தியும், தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் வண்ணம் உலக நாடுகளிலிருந்து புகழ் பெற்ற நிறுவனங்கள் மூலம் தமிழகத்திற்கு தொழில் முதலீடு ஈர்த்து அதன் மூலம்இந்திய அளவில் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழகம் என்று உலக நாடுகளின் பாராட்டைப் பெற்றது மட்டுமல்லாது, இந்த சாதனைகளுக்கு எல்லாம் மணிமகுடமாகும் வகையில் இந்திய அளவில் உள்ள பெரிய மாநிலங்களில் பொருளாதாரம், வேளாண்மை, பொது சுகாதாரம், அடிப்படை வசதி ஆகியவை உள்ளடங்கிய வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு ,ஆளுமைத்திறன், தொழில் முனைவோர் ஊக்குவித்தல், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் பேணுதல் ஆகிய வகைப்பாடுகளில் அடிப்படையில் சிறந்த மாநிலமாக தேர்வு செய்து அதற்குரிய விருதினை வழங்கி வருகிறது.  தற்போது இந்த 2020 ஆண்டில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஆய்வு செய்ததில் நலத்திட்டங்களில் அக்கறை கொண்டுள்ள அரசு என்றும், சமூக நதியில் பின்தங்கிய மக்களை உயர்த்துவது குறிக்கோளாக கொண்டும், பொது கல்வி சமூக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழகம் 1,263.1 புள்ளியை பெற்று தமிழகம் இந்திய அளவில் சிறப்பாக செயல்பட்டு முதலிடத்தில் உள்ளது என்று விருதினை பெற்றுள்ளது.  இதன் மூலம் எட்டரை கோடி தமிழ் மக்கள் வாழும் தமிழ் தேசததை இந்திய தேசியமே வியந்து பாராட்டும் வகையில் உயர்த்தி காட்டி தமிழினத்திற்கு அழியாப் புகழைப் பெற்றுத் தந்த உழவன் வீட்டில் உதித்த விடியல் சரித்திரம் போற்றும் சாமானிய முதல்வர், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பை நனவாக்கிய சமூகநீதிக் காவலர், முதல்வர் எடப்பாடியார், அவருக்கு துணையாக நிற்கும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஆகியோருக்கு  அம்மா பேரவை பொற்பாதம் வணங்கி கோடான கோடி நன்றிகள் காணிக்கையாக்கி வழங்குகிறது.  தொடர்ந்து ஏற்கனவே கடந்த 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் தேர்வு செய்யப்பட்டு இரண்டு முறை விருதினைப் பெற்றது. தற்போது மூன்றாவது முறையாக தமிழகத்தை சிறந்த மாநிலமாக முதலிடத்தில் உருவாக்கி ஹாட்ரிக் சாதனை படைத்த முதல்வரின் சாதனைத் திட்டங்களை  அம்மா பேரவை சார்பில் மக்களிடத்தில் எடுத்துரைத்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இமாலய வெற்றியை பெற்றுத் தந்து களப்பணி ஆற்றுவோம் என்று அம்மா பேரவைசூளுரை ஏற்கிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து