அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு புதிய நிர்வாகிகள் நியமனம்: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2020      தமிழகம்
EPS OPS 2020 11 08

Source: provided

சென்னை : அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக சுரேஷ், துணைத் தலைவர்களாக பாலமுருகன், பிரீத்தி சஞ்சனா, செயலாளர் அஸ்பயர் கே.சுவாமிநாதன், இணைச்செயலாளர்களாக பிரசாத், பத்மாவதி, சுஜைனி, ஜெய சசிகுமார், துணைச்செயலாளர்கள் - சதீஷ் ராஜ், தனஸ்ரீ விஜயபாஸ்கர், விஜய் பாரத், வினோத்குமார், மோகன பிரியா, பொருளாளர் மணிகண்டன்.

வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக காமேஷ், துணைத் தலைவர்களாக ராஜசேகர், சரவணகுமார், செயலாளர் ஜனனி பி.சதீஷ்குமார், இணைச்செயலாளர்களாக பிரபு, உமாசங்கர், ரித்திஷ், கோபிநாத், துணைச் செயலாளர்களாக சி.சரவணபிரபு, டி.நிவாஸ், எஸ்.தரணிதரன், அக்ரி கே.பாலாஜி, எஸ்.ராஜசேகரன், பொருளாளராக எஸ்.ஜெகதீஸ்வரி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக எஸ்.டி.தர்மேஷ்குமார், துணைத் தலைவர்களாக எஸ்.வி.ராதாகிருஷ்ணன், எம்.செண்பகராஜ், செயலாளராக சிங்கை ஜி.ராமச்சந்திரன், இணைச்செயலாளர்களாக ஜே.அபிஷேக் ஜேக்கப், எஸ்.விக்னேஷ், வி.ராஜகோபால், ஏ.எம்.கார்த்திக், துணைச்செயலாளர்களாக கவுதம் ஜி.பால்ராஜ், எல்.அருண், கார்த்திக் பொன்னுசாமி, எம்.கே.எம்.கணேஷ், எம்.ரமணிகாந்த், கே.எஸ்.மோகன்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.  திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக என்.ராஜராஜசோழன், துணைத்தலைவர்களாக எஸ்.சத்தியமூர்த்தி, மணவை ஜே.ஸ்ரீதரன் ராவ், செயலாளராக பி.வினுபாலன், இணைச்செயலாளர்களாக பி.இளவரசன், எம்.சதீஷ்குமார், ஏ.திருநாவுக்கரசு, டி.ரமேஷ்குமார், துணைச்செயலாளர்களாக, சுரேஷ், மணிகண்டன், அரியலூர் கோபாலகிருஷ்ணன், பாலாஜி, ராமச்சந்திரன், பொருளாளர் அருண்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். மதுரை மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் செல்வகுமார், துணைத்தலைவர்கள் கவுரிசங்கர், கவின்ராஜ், செயலாளராக ராஜ்சத்யன், இணை செயலாளராக மணிகண்டன் கிருஷ்ணன், நல்லகுமார், ஹாஜா அமீர் ஹூசைன் சாஹிப், விக்னேஷ், துணை செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், மலேஷ், மந்திரமூர்த்தி, தமிழ்செல்வன், சிவ ஆனந்த், பொருளாளர் பான்பிரதாப் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

 

தொலைக்காட்சிகள், சமூக தொடர்பு ஊடகங்களில் அ.தி.மு.க. நிலைப்பாடு குறித்து எடுத்துரைப்பதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள செய்தி தொடர்பாளர் பட்டியலில் அப்சரா ரெட்டி இணைத்து கொள்ளப்படுகிறார். இவ்வாறு அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து