சென்னை : டிசம்பர் 1-ம் தேதி முதல் சென்னை-விஜயவாடா இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க மாா்ச் 25-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கம் தற்போது தளா்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை-விஜயவாடா இடையே சிறப்பு ரெயில் டிசம்பர் மாதம் 1-ம் தேதி முதல் இயக்கப்படுவதக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
விஜயவாடா-சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் (வண்டி எண்: 02711) இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் வருகிற டிசம்பர் மாதம் 1-ம் தேதி முதல் தினசரி காலை 6.10 மணிக்கு விஜயவாடா ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-விஜயவாடா (02712) இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் வருகிற டிசம்பர் மாதம் 1-ம் தேதி முதல் தினசரி மதியம் 2.10 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.