பழனி முருகன் கோவிலில் வரும் 1-ஆம் தேதி முதல் மீண்டும் மின் இழுவை ரயில் சேவை

ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2020      தமிழகம்
Palani-Murugan 2020 11 29

Source: provided

பழனி : திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் வரும் 1-ஆம் தேதி முதல், மீண்டும் மின் இழுவை ரயில் சேவையை வழங்க கோவில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. 

இது குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது;- 

பழனிக் கோயிலில் டிச.1 முதல் மூன்று வின்ச்சுகளும் 50 சதவிகித பக்தர்களுடன் இயக்கப்படும் மின்இழுவை ரயிலில் இருவழிப்பாதை கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

செல்போன், கேமரா போன்றவற்றிற்கு அனுமதி இல்லை. ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்யமுடியும். எந்த வின்ச்சுக்கு எந்த நேரத்துக்கு பதிவு செய்யப்பட்டதோ அதில் மட்டுமே பயணிக்க முடியும். குறிப்பிட்ட நேரத்துக்கு கால்மணி நேரம் முன்னரே அசல் ஆதார் போன்ற சான்றுகளுடன் நிலையம் வந்துவிட வேண்டும் என திருக்கோயில் செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி, ஐ.ஏ.எஸ்., அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து