செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 5 நாட்களாக வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தம்

ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2020      தமிழகம்
Chembarambakkam 2020 11 17

Source: provided

சென்னை : நிவர் புயல் தாக்கத்தால் பெய்த கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவான 24 அடியில் 22 அடியை எட்டியதால் கடந்த 25-ஆம் தேதி முதல் நீர் திறந்துவிடப்பட்டது. 

ஏரிக்கு வரும் நீர்வரத்துக்கேற்ப வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது நீர் வரத்து முற்றிலும் குறைந்ததால், நீர் திறப்பை மூட முடிவு செய்யப்பட்டது. 

இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 5 நாட்களாக வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது. மதகுகளுக்குள் ஏராளமான செடிகள் சிக்கி கொண்டதால் வினாடிக்கு 350 கனஅடி நீர் வீணாக வெளியேறி வந்தது. இதனால் மதகுகளில் சிக்கி கொண்டிருந்த செடிகள் அகற்றப்பட்டு உபரி நீர் நிறுத்தப்பட்டது. மதகில் இருந்த சகதி மற்றும் செடிகள் நீக்கப்பட்டு மதகு மூடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து