அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 4 வாரங்களில் தேர்வு கட்டணத்தை செலுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவு

திங்கட்கிழமை, 30 நவம்பர் 2020      தமிழகம்
Madras-High-Cort 2020

Source: provided

சென்னை : அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 4 வாரங்களில் தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் இறுதியாண்டு பருவத் தேர்வை தவிர மற்ற பருவத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்த மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்தும் தேர்வு கட்டணம் செலுத்த நிர்பந்திக்கக் கூடாது என்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட்டது.

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் 4 லட்சம் மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணியை தவிர இதர பணிகளுக்கும் ரூ.37.11 கோடி செலவாகி உள்ளது. எனவே மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தை திருப்பி செலுத்தினால் நிதிச்சுமை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட சென்னை உயர் நீதிமன்றம் அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுக் கட்டணம் வசூலித்த உத்தரவு செல்லும் என்றும் கட்டணத்தை செலுத்தாத மாணவர்கள் 4 வாரங்களில் தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது. மேலும் மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து